Sthothiram Yesuvukae – Leebanon Assembly Tamil Christian Lyrics
Sthothiram Yesuvukae is the latest Tamil Christian song written, tuned & sung by Pastor John Christopher T D, Leebanon Assembly, Nagercoil. This song was released on September 29, 2022 through John Christopher YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Sthothiram Yesuvukae
Release Date: September 29, 2022
Lyrics, Tune & Vocals: Pastor John Christopher T D
Guitars: Keba Jeremiah
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவுக்கே துதி
சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்
இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை
துன்பம் சூமும் எவ்வேளையிலும்
நன்றியோடு நாம் பாடிடுவோம்
2. தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும்
அவர் நம்மோடு இருப்பேன் என்றார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும்
விக்கினம் சூழாதென்றார்
3. கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும்
வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார்
4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார்
அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பனவர்