Neenga Sollum Varaikkum – Pastor Paul Moses Tamil Christian Lyrics
Neenga Sollum Varaikkum is the latest Christian Tamil Worship song written, tuned and sung by Tamil Christian senior pastor, singer, song-writer, Pastor R Paul Moses and music composed by Alwyn M. This song was released on September 25, 2021 through Paul Moses YouTube channel.
…The Lord my God will enlighten my darkness.
Psalm 18:28
Nothing is over till God says it is over—“Neenga Sollum Varaikkum” (Until You Say) is a prophetic song that portrays God’s all-weather love that runs towards us to help and completely restore our lives. He is more than able to turn the bitter waters of Marah into sweetness!
Specially dedicating this song to each one who has lost their loved ones in the pandemic.
. . என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
சங்கீதம் 18:28
அவர் சொல்லும்வரைக்கும் எதுவும் முடிவதில்லை—
உதறித் தள்ளப்பட்ட நம்மிடம் ஓட வந்து, நமக்கு உதவிச்செய்து, மீண்டும் கட்டியெழுப்ப ஆற்றல்மிக்க தேவனுடைய மாறாத அன்பைக் குறித்த தீர்க்கதரிசன பாடல்! மாராவின்கசப்பை மதுரமாக்க அவர் வல்லவரன்றோ—
இப்பேரிடர் காலத்தில் தங்களுக்கு இனிமையானவர்களை இழந்த குடும்பங்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Neenga Sollum Varaikkum
Release Date: September 25, 2021
Lyrics, Tune, composition & Vocals: Pastor R Paul Moses
Music: Alwyn M
எல்லாம் முடிஞ்சிருச்சி
என்று நான் நினைக்கும் போது
புது துவக்கம் தந்து
மகிழ செய்பவர் நீர்தானே
நீங்க சொல்லும் வரைக்கும்
எதும் முடிவதில்லையே
நீங்க செய்ய நினைச்சத
எவரும் தடுப்பதில்லையே
சகலமும் செய்ய வல்லவரே
Verse 1:
கைகழுவும் மனிதர்கள்முன்
ஒடுங்கி நின்ற என்னை
ஒதுங்கி போகாமல்
கைபிடித்து உயர்த்தும் அன்பு
பகலோ இரவோ வித்தியாசமே இல்ல
உங்க அன்பு தொடரும் எந்தன்
சுவாசம் உள்ள வர
உங்க அன்பு நிழல் என்னை தொடருதே
நிறைவான (நான் நினைக்காத)
வாழ்வை கொடுக்குதே
Verse 2:
கடந்திட்ட காலங்களும்
அடைந்திட்ட காயங்களும்
உமது வாக்குத்தந்து
இதயத்தை தேற்றினீரே
மார்பில் சாயவைத்து
காயம் கட்டிடுவீர்
தோளில் இடங்கொடுத்து
தூக்கி சென்றிடுவீர்
மாராவை மதுரமாக்குவீர்
தீமைகளை நன்மையாக்குவீர்