Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Kartharin Aavi Engeyo
Release Date: June 13, 2021
Lyrics: Dr. A Jawahar Samuel & Pastor Daniel Jawahar
Tune & Vocals: Pastor Daniel Jawahar
Music: Samuel Melkisadek
- Tamil
கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்
1.ஜீவனும் சுவாசமும்
உயிரெல்லாம் அவர் தான்
சிந்தையும் தியானமும்
ஏக்கமும் அவர் தான்
என்னையே மறந்தேன்
உம்மையே கவர்ந்தேன்
நெஞ்சத்தில் உம்மையே
சொந்தமாய் அடைந்தேன்
உங்க சமுகம் மூடுதே
இதயம் உங்களை பாடுதே
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்
2.பர்வதம் நோக்கியே
கண்களும் பார்க்குதே
ஒத்தாசை வருவதை
ஆவியும் உணருதே
உள்ளத்தின் ஆழத்தில்
ஏதேதோ நடக்குதே
இயேசுவே இயேசுவே
என்னையே மறக்கிறேன்
மகிமையின் மேகமும்
என்னையே நடத்துதே
அக்கினி ஸ்தம்பமும்
என்னையே காக்குதே
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்
3.கருவையும் கண்டீரே
கரத்தாலே சுமந்தீரே
கண்மணி போல
என்னையும் காத்தீரே
என்றுமே நீங்க தான்
எல்லாமே நீங்க தான்
இயேசு மட்டும் போதுமே
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்