Jebikka Jebikka – John Venkatesh Tamil Christian Lyrics
Jebikka Jebikka is the latest christian Tamil worship song from the album, Neerae En Geetham written, tuned and sung by John Venkatesh and music composed by Kirubakaran B. This song was released on June 11, 2021 through John Venkatesh YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Jebikka Jebikka
Album: Neerae En Geetham
Release Date: June 11, 2021
Lyrics, Tune, Vocals: John Venkatesh
Music: Kirubakaran B
ஜெபிக்க ஜெபிக்க ஜெயத்தைக் கொடுக்கும் ஜீவ தேவனே
துதிக்க துதிக்கத் தூய்மையாக்கும் துதியின் வேந்தரே
என் தேசத்தை நீர் பாருமைய்யா
என் ஜனங்களை கண்ணோக்குமைய்யா
- அழிவினில் நிற்கின்றவர் ஜீவனை அடைய வேண்டுமே
இருளினில் இருப்பவர் உம் ஒளியைக் காண வேண்டுமே
திறப்பினில் நின்று கொண்டு சுவரை அடைக்க ஜெபிக்கின்றோம் - நன்மை செய்யும் மனமில்லை நல்லவரே நீர் வேண்டுமைய்யா
உண்மை இங்கு காணவில்லை உத்தமரே நீர் பேசுமைய்யா
இரக்கத்தின் தெய்வமே இரங்க வேண்டும் இப்பொழுதே - பாகால்களை உடைத்திட பரிசுத்தரே நீர் வாருமே
பார்வோன்களைஜெயித்திடபரிகாரியே நீர் வாருமே
சத்ருக்களை நசுக்கிட சத்தியரே நீர் வாருமே