Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Innum Oruvisai
Release Date: August 13, 2020
Lyrics, Tune, Vocals : T Stephen Rajkumar
Music: Stephen J Renswick
- Tamil
வானம் திறக்கனும்
மகிமை இறங்கனும்
மறுரூபமாகனுமே
நான் மறுரூபமாகனுமே
ஏங்குகிறேன் கதறுகிறேன்
தாகமாய் இருக்கின்றேன்
இன்னும் ஒருவிசை
உந்தன் மகிமையைப்
பார்த்திட விரும்புகிறேன்
- வானத்திற்கும் பூமிக்கும்
ஏணி ஒன்றை நான் பார்த்தேன்
தேவனை தரிசிக்கும்
தேவதூதர்முகம் பார்த்தேன்
களைத்துப்போய் நின்றாலும்
தரிசனம் தந்திடுவார்
சோர்ந்து நின்ற இடத்தையே
பெத்தேலாய் மாற்றிடுவார்
வானத்தின் வாசல் அதுவே
மகிமையின் வாசலும் அதுவே - உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்
தேவனின் கிரியை கண்டேன்
தீர்க்கமாய் உரைத்திடவே
வார்த்தையின் வல்லமை கண்டேன்
எலும்புகள் உருவாகும்
நரம்புகள் ஒன்றுசேரும்
சேனையாய் எழும்பி நின்று
தேசத்தை சுதந்தரிக்கும்
மரித்தோரின் பள்ளத்தாக்கிலே
ஜீவனின் வாசனை வீசிடுதே
என் தேசம் முழுவதிலும்
எழுப்புதல் தீயாய்பரவிடுதே